புரோக்கோலி சட்னி செய்வது எப்படி

புரோக்கோலி சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

புரோக்கோலி – 1 (பூக்களைப் பிரித்து முக்கால் கப் எடுக்கவும்)
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 அல்லது 3
இஞ்சி – சிறிய துண்டு
சிறிய தக்காளி – 1 (சற்று பெரியதாக நறுக்கவும்)
துருவிய தேங்காய் – 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்
பூண்டு – 3 அல்லது 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, உளுத்தம்பருப்பு போட்டு வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் புரோக்கோலிப் பூக்களைச் சேர்த்து வேகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, புளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் இட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். இதை அப்படியே தோசை, இட்லிக்கு தொட்டுச் சாப்பிடலாம். தாளித்து ஊற்ற நினைப்பவர்கள் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, தாளித்து சட்னியில் ஊற்றிப் பரிமாறலாம்.

Rates : 0

Loading…