பேக்டு பொட்டேட்டோ செய்வது எப்படி

பேக்டு பொட்டேட்டோ செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 4

குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

கேரட் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

எலும்பில்லாத கோழிக்கறி – ஒரு கப் (வேகவைக்கவும்)

சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 3 டேபிள்ஸ்பூன்

மயோனைஸ் – 3 டேபிள்ஸ்பூன்

புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 3 டேபிள்ஸ்பூன்

சீஸ், ஸ்பிரட் – தலா 3 டேபிள்ஸ்பூன்

வினிகர் – கால் டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயத்தாள் – அரை கப்

மொசரல்லா சீஸ் – ஒரு கப்

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு


செய்முறை:

`அவனை’ 200 டிகிரி சென்டிகிரேடுக்கு பத்து நிமிடங்கள் ப்ரீஹீட் செய்யவும். உருளைக்கிழங்கைக் கழுவி, அதன் மீது எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் தடவவும். முள்கரண்டியால் உருளைக்கிழங்கைச் சுற்றிலும் குத்தி ஓட்டை போடவும். இதை `அவனில்’ வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பிறகு உருளைக்கிழங்கை நீளவாக்கில் துண்டுகளாக்கி , உள்ளே உள்ள சதையை எடுத்துவிட்டு, ஒடு போல் ஆக்கிக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கு சதையுடன் மயோனஸ், தயிர், தக்காளி சாஸ், சீஸ், ஸ்பிரட், வினிகர், உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ், குடமிளகாய், கேரட், வெங்காயத்தாள், கோழிக்கறி சேர்த்துக் கலக்கவும். உருளைக்கிழங்கு ஓட்டின் உள்ளே இந்த கலவையை வைத்து அடைக்கவும். இதன் மேல் மொசரல்லா சீஸ்ஸை தூவி, 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனில் 12 நிமிடங்கள் வைத்து (சீஸ் உருகும் வரை) வெளியே எடுக்கவும். இறுதியாக இதன் மீது கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

கோழிக்கறிக்குப் பதிலாக பனீர் வைத்தும் செய்யலாம்.

Rates : 0

Loading…