முள்ளங்கி இலை சட்னி செய்வது எப்படி

முள்ளங்கி இலை சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

முள்ளங்கி இலை – ஒரு கப்
இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 5
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
புளி – ஒரு சின்ன எலுமிச்சை அளவு (தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்)
துருவிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 1
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு


செய்முறை:

முள்ளங்கி இலைகளைக் கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், பச்சை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, முள்ளங்கி இலைகளைச் சேர்த்து, அவை சுருங்கும் வரை வதக்கவும். இதில் புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கிளறவும். புளியின் பச்சை வாசனை போனதும் தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கி ஆற விடவும். ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி பரிமாறவும்.

Rates : 0

Loading…