ரிட்ஜ் கோர்டு சட்னி பீர்க்கன்காய் செய்வது எப்படி

ரிட்ஜ் கோர்டு சட்னி பீர்க்கன்காய் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

மீடியம் சைஸ் பிர்க்கன்காய் – 2
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


தாளிக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்


செய்முறை:

பீர்க்கன்காயின் மேற்புறத்தில் உள்ள கடினமான தோலை நீக்கிக் கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்கி, தனியாக வைக்கவும்.

அதே சட்டியில் பீர்க்கன்காயைச் சேர்த்து சுருங்க வதக்கவும். அடுப்பை அணைத்து ஆற விட்டு, வதக்கியவற்றை எல்லாம் மிக்ஸியில் சேர்த்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து தனியாக ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, சட்னியில் இட்டு கலக்கிப் பரிமாறவும்.

Rates : 0

Loading…