வேப்பம்பூ ரசம் தயாரிப்பது எப்படி

வேப்பம்பூ ரசம் தயாரிப்பது எப்படி


தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் – 200 மில்லி
புளி- நெல்லிக்காய் அளவு (ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும் )
தக்காளி- 2 (நைஸாக அரைத்துக்கொள்ளவும்)
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு


தூள் செய்ய :

மிளகு – ஒன்றரை டீஸ்பூன்
சீரகம்- ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2


தாளிக்க :

கடுகு – அரை டீஸ்பூன்
வேப்பம்பூ- 3 டேபிள்ஸ்பூன்
நெய்- ஒன்றரை டேபிள்ஸ்பூன்


செய்முறை :

வாணலியில் புளிக்கரைசலுடன், அரைத்த தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் தூளாக்க செய்ய கொடுத்தவற்றை தூளாக்கிச் சேர்த்துக் கலக்கவும். இதை 2 முதல் 3 நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கலவை லேசாக கொதிக்கும் போது துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீரை ஊற்றவும். ரசம் நுரைத்து வரும்போது, தாளிக்கத் தேவையானவற்றைத் தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

Rates : 0

Loading…