வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி

வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 5
பச்சை வேர்க்கடலை – முக்கால் கப்
பூண்டு – 5 பல்
மல்லி (தனியா) – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 1
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – அரை டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 10 இலைகள்
தண்ணீர், உப்பு – தேவையான அளவு
கடுகு – அரை டீஸ்பூன்


செய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊற வைக்கவும். வேர்க்கடலையின் பருப்புகளைத் தனியாக எடுத்து வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். ஆறியதும் வேர்க்கடலையின் தோலை நீக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), ஐந்து கறிவேப்பிலை இலைகள் சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்கவும். அடுப்பை அணைத்து கலவையை மிக்ஸியில் இட்டு, புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், உப்பு, வேர்க்கடலை சேர்த்து நன்கு அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, மீதியிருக்கும் கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்துக் கிளறி இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும்.

Rates : 0

Loading…