வேர்க்கடலை பூண்டு சட்னி செய்வது எப்படி

வேர்க்கடலை பூண்டு சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

வறுத்த வேர்கடலை – 1 கப்

பூண்டு – 1 கப்

பச்சை மிளகாய் – 10

கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் – தாளிக்க

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாயை வதக்கவும்.

கடலையை மொறுமொறுப்பாக வறுக்கவும்.

வறுத்த வேர்கடலை, பூண்டு, பச்சை மிளகாயை உப்பு சேர்த்து அரைக்கவும்.

கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வேர்க்கடலை விழுதில் சேர்க்கவும்.

தோசை சப்பாத்திக்கு ஏற்ற வேர்க்கடலை பூண்டு சட்னி தயார்.
வேர்க்கடலையும், பூண்டும் தேவையில்லாத கொழுப்பை கட்டுப்படுத்தி உடலை கட்டுக்கோப்பாக்கும். பூண்டு இதயம் வலிமை பெற உதவும்.

Rates : 0

Loading…