ஃப்ரைடு ஐஸ்க்ரீம் லட்டு எப்படி செய்வது

ஃப்ரைடு ஐஸ்க்ரீம் லட்டு எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

வெனிலா ஐஸ்க்ரீம் தேவைக்கேற்ப,
மைதா மாவு அரை கப்,
பொடித்த ஹனி கார்ன்ஃப்ளேக்ஸ் அல்லது பிரெட் தூள் தேவையான அளவு,
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:

வெனிலா ஐஸ்க்ரீமை ஒரு ஸ்கூப் எடுத்து, பொடித்த கார்ன் ப்ளேக்ஸ் அல்லது பிரெட் தூளில் புரட்டி, தனியே வைக்கவும். இதேபோல் ஒவ்வொரு ஸ்கூப்பாக எடுத்து பிரெட் தூள் அல்லது பொடித்த கார்ன் ப்ளேக்ஸில் புரட்டி ஒரு தட்டில் அடுக்கி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். பின்பு மைதா மாவை தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.

ஃப்ரீசரில் வைத்து எடுத்த லட்டுகளை மைதா மாவில் தோய்த்து எடுத்து தட்டில் அடுக்கி, மறுபடியும் செட்டாகும் வரை ஃப்ரீசரில் வைக்கவும் (குறைந்தது ஒரு மணி நேரம்). வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மைதா மாவில் தோய்த்த லட்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மிகவும் ருசியான இந்த லட்டை பொரித்த எடுத்த உடனேயே சாப்பிட வேண்டும்.

Rates : 0

Loading…