அவல் ஃப்ரை எப்படி செய்வது

அவல் ஃப்ரை எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

மெல்லிய அவல் – ஒரு கப்,
பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
சீரகம் – கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2 (கிள்ளவும்),
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து… பொட்டுக்கடலை, மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இதனுடன் அவலையும் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அவல் மொறுமொறு என வரும் வரை வறுத்து எடுக்கவும். (தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணெய் சேர்க்கலாம்). ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவைத்து பயன்படுத்தவும்.

Rates : 0

Loading…