ஆரோக்கியமான பயனுள்ள 10 மருத்துவ குறிப்புக்கள்

ஆரோக்கியமான பயனுள்ள 10 மருத்துவ குறிப்புக்கள்

வாழ்க்கைக்கு உகந்த 10 வீட்டு வைத்தியங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.

மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

நீர் பிரம்மி இலையை நிழலில் உலர்த்தி கஷாயம் தயார் செய்து அருந்தினால் நரம்பு தளர்ச்சி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். மேலும் சிறுநீர் பெருக்கம் ஏற்படும்.
மருதம் இலையை அரைத்து ஒ‌ரு கிராம் அளவு எடுத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர நாட்பட்ட வயிற்று வலி குணமாகும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். அல்லது வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம்.

அதிமதுரத்தை நீர் விட்டு காய்ச்சிய பின் பாலில் ஊறவைத்து 15 நிமிடம் கழித்து முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தபின் குளிக்க வேண்டும். அவ்வாறு தேய்த்து குளித்தால் தலைமுடி கருமையாக மாறும்.
எலுமிச்சை சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கால் வெடிப்புகளில் பூசினால் கால் வெடிப்பு மறைந்து கால் பளபளப்பாக மாறும்.

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும்.

முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும்.

முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை செரிமான மண்ட‌லத்தை சீராக இயக்கி மலச்சிக்கல் பிரச்‌சனையை குணமாக்கும்.

Rates : 0

Loading…