காலையில் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் உங்களுக்குதான் இது

காலையில் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உங்களுக்குதான் இது

வெறுமனே உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். உடல் எடையைக் குறைக்கும் என்பதையும் தாண்டி, தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதால், உங்களால் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு நன்மைகள் நடக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதால், கீழ்வரும் பிரச்னைகள் குணமாகும் என கண்டறியப்பட்டுள்ளது.

அவை, ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுவலி, இதய துடிப்பு திடீரென கூடுவது, குறைவது,

கால்- கை வலிப்பு, கொழுப்பு அளவு அதிகரித்தல், இருமல், உடல்வலி, ஆஸ்துமா, நரம்பு தடிப்பு நோய்கள், வயிற்றுக்கோளாறுகள், பசியின்மை, கண், காது, தொண்டை தொடர்பான பிரச்னைகள்.

தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் 2 டம்ளர் அளவுக்கு சூடான நீரைப் பருக வேண்டும்.

காலையில் சூடான நீரைக் குடித்தபின், அடுத்த 45 நிமிடங்கள் வரை வேறு எந்த உணவையும், காபி, டீ கூட எடுத்துக் கொள்ளக் கூடாது.

இந்த 45 நிமிட இடைவெளி மிக அவசியம். அந்த இடைவெளி அவசியம் என்பதால் தான், எழுந்தவுடன் குடிக்கச் சொல்கிறார்கள்.

குளிர்ந்த நீர் குடிப்பதன் மூலம் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் உண்டாகின்றன. இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இதயம் தொடர்பான பாதிப்புகளுக்கு நிச்சயம் குளிர்ந்த நீர் காரணமாக இருக்கும்.

குளிர்ந்த நீரை அதிகமாகக் குடிப்பதால், கல்லீரல் பிரச்னைகளை உருவாக்குகிறது. உடலில் உள்ள கொழுப்புகள் கல்லீரலில் சென்று தேங்கும் நிலையும் இருக்கிறது.

குளிர்ந்த நீரை அதிகமாகக் குடிப்பதால், வயிற்றின் உள் சுற்றுச்சுவர்கள் பாதிப்படைகின்றன. அது பெருங்குடல் பகுதியை பாதித்து குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

Rates : 0

Loading…