கொள்ளுக் காரக் குழம்பு எப்படி செய்வது

கொள்ளுக் காரக் குழம்பு எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கொள்ளு – 200 கிராம்,
தோல் உரித்த சின்ன வெங்காயம் – 100 கிராம்,
சுண்டைக்காய் வத்தல் – 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5,
மிளகு, சீரகம் – தலா 50 கிராம்,
தனியா – 100 கிராம்,
தக்காளி – 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – 100கிராம்,
கடுகு – உளுத்தம் பருப்பு – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
புளி – ஒரு எலுமிச்சை அளவு.


செய்முறை:

வெறும் கடாயில் கொள்ளு சேர்த்து வறுத்து, மிக்ஸியில் ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம் இவற்றைச் சிறிது எண்ணெயில் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும். கடாயில் மீண்டும் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கி, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கி, சுண்டைக்காய் வத்தல் போட்டு, புளியைக் கரைத்துவிடவும். இதில் அரைத்த கொள்ளுப் பொடி, மசாலாப் பொடியைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு மேலாகக் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இதே முறையில், கொள்ளுப் பொடியைக் குறைவாகப் போட்டு, ரசப்பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால், கம-கம ரசம் தயார்.

Rates : 0

Loading…