கொள்ளு ரசம் எப்படி செய்வது

கொள்ளு ரசம் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கொள்ளு – அரை கப்,
புளி – சிறு எலுமிச்சை அளவு,
உப்பு – தேவையான அளவு,
ரசப்பொடி – ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: நெய் – அரை டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை.


செய்முறை:

கொள்ளை அரை மணி நேரம் ஊறவைத்து, நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். வேகவைத்த பிறகு, தண்ணீரைத் தனியே வடித்து விடவும். வெந்த கொள்ளை, சுண்டலாகத் தாளித்து உண்ணலாம். புளியைத் தேவையான தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்.

அதில் ரசப்பொடி, உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைக்கவும். பிறகு கொள்ளு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து நுரை கட்டி வரும்போது, நெய்யில் தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.

Rates : 0

Loading…