கோவா ஜிலேபி எப்படி செய்வது

கோவா ஜிலேபி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

சர்க்கரை இல்லாத கோவா 200 கிராம்,
மைதா மாவு கால் கப் (3 4 டேபிள்ஸ்பூன்),
சர்க்கரை 300 கிராம், பால்,
மஞ்சள் ஃபுட்கலர் சிறிதளவு,
ரோஸ் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) சில துளிகள்.


செய்முறை:

மைதா மாவை நீர் விட்டு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும். இதை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். கோவாவை சிறிது பால் விட்டு கரண்டியால் நன்றாக மசித்துக்கொள்ளவும். இதை குழைத்து வைத்திருக்கும் மைதா பேஸ்ட்டுடன் நன்றாக கலந்து, மேலும் ஒரு மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் சர்க்கரையை சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு தயார் செய்துகொள்ளவும். இதில் மஞ்சள் ஃபுட் கலர், ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு (அடுப்பை மிதமான தீயில் வைத்து), பால் கவரில் ஒரு மூலையில் ஓட்டை போட்டு, மாவை கவரில் போட்டு, சூடான எண்ணெயில் வட்டமாக பிழிந்து, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும். இந்த ஜிலேபிகளை சர்க்கரைப் பாகில் போட்டு சிறிது நேரம் கழித்து வெளியே எடுத்து பரிமாறவும் (இது சட்டென்று ஊறிவிடும்).

Rates : 0

Loading…