டேட்ஸ் வால்நட் பர்ஃபி எப்படி செய்வது

டேட்ஸ் வால்நட் பர்ஃபி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

விதை நீக்கிய பேரீச்சை கால் கிலோ,
பால் 100 மில்லி, வால்நட் (அக்ரூட்) 50 கிராம்,
நெய் ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன்,
டெஸிகேட்டட் கோகனட் (உலந்த தேங்காய்த் துருவல் டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) 3 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

பாத்திரத்தில் பாலை விட்டு, துண்டுகளாக்கிய பேரீச்சம்பழத்தைப் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு, அதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். வால்நட்டையும் கொரகொரப்பாக பொடித்துக்
கொள்ளவும்.

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, பேரீச்சை விழுது, பொடித்த வால்நட் தூள், சர்க்கரை சேர்த்து, நெய் விட்டு கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும். ஒரு தட்டில் உலர்ந்த தேங்காய்த் துருவலை பரப்பவும். பேரீச்சை கலவை ஆறியவுடன், சிறிய சிறிய உருளைகளாக செய்து, அவற்றை தட்டில் வைத்திருக்கும் தேங்காய்த் துருவலில் நன்றாக புரட்டி எடுத்து வைக்கவும்.

Rates : 0

Loading…