பலா சமையல் குறிப்புகள் எப்படி செய்வது

பலா சமையல் குறிப்புகள் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பலாப் பழ அல்வா
பலாப் பழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். இதில் பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். அல்வா பதத்தில் வந்ததும், தேவைக் கேற்ப சர்க்கரை சேர்த்து, நெய் விட்டுக் கிளறவும். சிறிது நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு, ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பதமாகக் கிளறி இறக்கவும்.

பலன்கள்: இரும்புச் சத்து அதிகம். சர்க்கரைக்குப் பதிலாகத் தேன் சேர்த்தால், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
பலாப் பழ அவியல்

15 பலாச் சுளைகள், இரண்டு மாங்காய்களைத் துண்டுகளாக நறுக்கித் தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டவும். தேங்காயைத் துருவி, பச்சை மிளகாய், சிறிது சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வடிகட்டிய மா, பலாக் கலவையில் மஞ்சள் பொடி, அரைத்த தேங்காய், சிறிது தேங்காய் எண்ணெய், உப்பு, தயிர் சேர்த்துச் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
பலன்கள்: ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் இருக்கும் உணவு. கேன்சர் நோயை வராமல் தடுக்கும். கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சக்து இதில் மிக அதிகம்.
பலாப் பழக் கொழுக்கட்டை

இரண்டு ஆழாக்கு அரிசியை, தண்ணீரில் ஊறவைத்து உலர்த்தி, நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஊறவைத்த கடலைப் பருப்பு, வெல்லம் இவற்றுடன் பலாப் பழத்தை அரைத்துப் பூரணமாகக் கிண்டவும். அரிசி மாவில் வெந்நீர் சேர்த்துக் கிளறி, ஒட்டாத பதத்தில் இறக்கவும். கையில் எண்ணெய் தொட்டு, அரிசி மாவை சொப்பு போல் செய்து, அதனுள் பலாப் பழப் பூரணத்தைவைத்து மூடி குக்கரில் சிறிது நேரம்வைத்து இறக்கவும்.
பலன்கள்: எளிதில் ஜீரணமாகும். காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
பலாப் பழக் கூட்டு

பாலைக் காய்ச்சி, அதில் நான்கு பலாச் சுளைகளைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, அரைத்த தேங்காய் விழுது, மிளகாய்த் தூள் சேர்த்துச் சிறிது கொதிக்கவிடவும். பிறகு இறக்கி, தேங்காய் எண்ணெய், கொத்தமல்லி சேர்க்கவும்.
பலன்கள்: வைட்டமின் ஏ, கால்சியம், புரதம் இதில் அதிகம் உள்ளதால், உடலுக்கு நல்ல ஊட்டச் சத்தைத் தரும்.
பலாப் பழப் பாயசம்

50 பலாப் பழச் சுளைகளை நன்கு அரைத்து, தேங்காய்ப் பாலில் விட்டு வேகவைக்கவும். கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்துக்கொள்ளவும். பலாச் சுளைக் கலவையில் வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து வறுத்த முந்திரியைப் போடவும்.
பலன்கள்: இரும்புச் சத்து அதிகம். உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
பலாப் பழ மசால் தோசை
நறுக்கிய வெங்காயம், தக்காளி, பலாச் சுளை, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இவற்றை மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். தோசைக்கல்லில் தோசை மாவை ஊற்றி, நடுவில் மசாலாவைவைத்து மடித்து வெந்ததும் எடுக்கவும்.
பலன்கள்: இதில் கொழுப்புச் சத்து இல்லை. எளிதில் ஜீரணமாகும்.

Rates : 0

Loading…