பாசிப்பருப்பு அல்வா எப்படி செய்வது

பாசிப்பருப்பு அல்வா எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு மாவு – ஒரு கப்,
ஜவ்வரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் – ஒரு கப், சர்க்கரை – 2 கப்,
சிவப்பு ஃபுட் கலர் – சிறிதளவு,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு – சிறிதளவு.


செய்முறை:

பாசிப்பருப்பு மாவு, ஜவ்வரிசி மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கரைக்கவும். அடி கனமான வாணலியில் மாவுக் கரைசல், சர்க்கரை, ஃபுட் கலர் போட்டுக் கலந்து அடுப்பில் வைத்து, நன்றாகக் கிளறிவிடவும். நெய்யை விட்டுக்கொண்டே மேலும் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும். மேலாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைப் பதித்து வைத்தால்… பாசிப்பருப்பு அல்வா ரெடி! இதை துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.

Rates : 0

Loading…