பிடிகருணை மசியல் எப்படி செய்வது

பிடிகருணை மசியல் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பிடிகருணைக்கிழங்கு – 200 கிராம்,
பச்சை மிளகாய் – ஒன்று,
இஞ்சி – சிறிய துண்டு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எலுமிச்சம்பழம் – ஒரு மூடி,
புளி – நெல்லிக்காய் அளவு,
கடுகு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
வெல்லம் – சிறிய துண்டு,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,


செய்முறை:

பிடிகருணையை வேக வைத்து, தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, வெல்லத்தைப் பொடித்து சேர்த்து கொதிக்கவிடவும். இதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Rates : 0

Loading…