பிரெட் உப்புமா எப்படி செய்வது

பிரெட் உப்புமா எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பிரெட் துண்டுகள் – 10,
வெங்காயம், கேரட் – தலா 2,
பச்சை மிளகாய் – 1,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

பிரெட்டில் சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகுத்தூள் போட்டு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் சேர்த்து வதக்கி, உதிர்த்த பிரெட், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
விருப்பப்பட்டால் பட்டாணி, குடமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.

Rates : 0

Loading…