பிரெட் குணுக்கு எப்படி செய்வது

பிரெட் குணுக்கு எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பிரெட் – 10 துண்டுகள்,
வெங்காயம், பேபிகார்ன் – தலா 2,
பச்சை மிளகாய், வேக வைத்த உருளைக்கிழங்கு – தலா 1,
பொடியாக நறுக்கிய புதினா – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

பிரெட்டை உதிர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பேபிகார்ன், வேக வைத்த உருளைக்கிழங்கு, புதினா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, பொன்னிற மாக வேக வைத்து எடுக்கவும்.

Rates : 0

Loading…