பிரெட் கேக் எப்படி செய்வது

பிரெட் கேக் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பிரெட் – 6 துண்டுகள்,
நெய்யில் வறுத்த மைதா மாவு – 100 கிராம்,
முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு – தலா 10,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – 100 கிராம்.,
சர்க்கரை – 200 கிராம்.


செய்முறை:

பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாதாம், முந்திரியை ஊற வைக்கவும். பாதாமை தோல் உரித்து, முந்திரி சேர்த்து நைஸாக அரைக்கவும். சர்க்கரையை, மூழ்கும்வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, சிறிது கொதித்ததும் மைதா மாவை சிறிது சிறிதாக போடவும். பிரெட் தூள், முந்திரி – பாதாம் விழுது, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

Rates : 0

Loading…