பிரெட் சாலட் எப்படி செய்வது

பிரெட் சாலட் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பிரெட் துண்டுகள் – 6, கேரட்,
வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1,
முளைக்கட்டிய பாசிப்பயறு, முளைக்கட்டிய கொண்டைக்கடலை – தலா 50 கிராம்,
எலுமிச்சம்பழம் – 1,
பொடியாக நறுக்கிய கொத்தமல்- சிறிதளவு,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

கேரட், வெள்ளரி, தக்காளியை வட்டமாக நறுக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பிளேட்டில் வைத்து நடு நடுவே வெள்ளரி, தக்காளி, கேரட், முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை, உப்பு, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு பிழிந்து பரவலாக விடவும்.
காலை நேர பரபரப்பில் ஈஸியாக தயாரிக்கலாம். முழுமையான ஊட்டச்சத்துடன் கூடிய பிரேக்ஃபாஸ்ட்டாக இருக்கும்.

Rates : 0

Loading…