பிரெட் சூப் எப்படி செய்வது

பிரெட் சூப் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பிரெட் துண்டுகள் – 4,
தக்காளி – 6,
மிளகுத்தூள் நெய் – தலா அரை டீஸ்பூன்,
வெண்ணெய், சோள மாவு – தலா ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,
துருவிய கோஸ் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் உரித்து, மிக்ஸியில் அரைக்கவும். கோஸ் துருவலை நெய் விட்டு வதக்கி, தக்காளி சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து லேசாக சூடாக்கவும். பிரெட்டை பொடித்து சேர்க்கவும். இதனுடன் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
சூடாக குடித்தால் ‘சூப்’பராக இருக்கும். காய் வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல், அதைச் சேர்த்தும் சூப் தயாரிக்கலாம்.

Rates : 0

Loading…