பிரெட் ஜாமூன் எப்படி செய்வது

பிரெட் ஜாமூன் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பிரெட் துண்டுகள் – 4,
சர்க்கரை கலக்காத பால் கோவா, பால் பவுடர் – தலா 100 கிராம்,
சர்க்கரை – 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இதனுடன் கோவா, பால் பவுடர் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சர்க்கரையை, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி… கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொரித்த ஜாமூன்களைப் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

Rates : 0

Loading…