பிரெட் நெய் அப்பம் எப்படி செய்வது

பிரெட் நெய் அப்பம் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பிரெட் துண்டுகள் – 2 (பொடித்துக் கொள்ளவும்),
அரிசி மாவு – 4 டீஸ்பூன்,
கோதுமை மாவு – 3 டீஸ்பூன்,
ரவை – 2 டீஸ்பூன்,
வாழைப்பழத் துண்டுகள் – 4,
பொடித்த வெல்லம் – 50 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – 4 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் – தேவையான அளவு.


செய்முறை:

அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, பிரெட் தூள், வெல்லத்தூள், ஏலக்காய்த் தூள், வாழைப்பழத் துண்டுகள் எல்லாவற்றையும் சேர்த்து, தேங்காய் பால் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். அப்பம் தயாரிக்கும் குழியில் நெய் தடவி, சிறு கரண்டியால் மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
தேங்காய் துருவல் சேர்த்தும் மாவைக் கரைக் கலாம்.

Rates : 0

Loading…