பிரெட் ஸ்பிரிங் ரோல் எப்படி செய்வது

பிரெட் ஸ்பிரிங் ரோல் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

மைதா மாவு – 100 கிராம்,
பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத்தாள்),
வெங்காயம், குடமிளகாய், கேரட் துருவல் – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
பிரெட் தூள் – 100 கிராம்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு… கேரட், குடமிளகாய், வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பிரெட் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். மைதா மாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, சிறு அப்பளங்களாக இட்டு, வதக்கிய கலவையை நடுவில் வைத்து பாய் போல் சுருட்டவும். இருபுறமும் தண்ணீரைத் தொட்டு மூடி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Rates : 0

Loading…