மஷ்ரூம் மசாலா எப்படி செய்வது

மஷ்ரூம் மசாலா எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

காளான் – 200 கிராம்,
வெங்காயம், தக்காளி – தலா 1,
இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மல்லித் தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய் – தலா 1,
சோம்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன்,
முந்திரி, கசகசா அரைத்த விழுது – 2 டேபிள்ஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.


செய்முறை:

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சிறிது நீர் விட்டு, கொதிக்கவிடவும். பிறகு, சுத்தம் செய்து நறுக்கிய காளானை உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். முந்திரி, கசகசா விழுது சேர்க்கவும். எல்லாம் நன்றாகச் சேர்ந்து வரும்போது, மிளகுத் தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி, பரிமாறவும். சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி என எல்லாவற்றுக்கும் ஏற்ற சைடு டிஷ் இது.

பலன்கள்:

நார்ச்சத்து, தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. காளான் ரத்தத்தில் படிந்துள்ள அதிக கொழுப்பைக் கரைத்துச் சுத்தப்படுத்தும். மலட்டுத்தன்மை, கருப்பை நோய்கள், மார்பகப் புற்று நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பவர்கள், காளானை அதிகம் பயன்படுத்தக்கூடாது. மற்றபடி, அனைவரும் சாப்பிடலாம். மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். கர்ப்பப்பையில் வரும் பிரச்னைகளை விரட்டும்.

Rates : 0

Loading…