முந்திரி மூங்தால் ஸ்வீட் எப்படி செய்வது

முந்திரி மூங்தால் ஸ்வீட் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை மாவு, வறுத்து அரைத்த பயத்தம்பருப்பு மாவு தலா ஒரு கப்,
முந்திரி பவுடர், பால் பவுடர் தலா கால் கப்,
நெய் ஒரு கப்பில் இருந்து ஒன்றரை கப் வரை,
சர்க்கரைத் தூள் இரண்டரை கப்,
ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்,
வறுத்த முந்திரி திராட்சை 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் நன்றாக கலந்துகொள்ளவும். பிறகு வாணலியில் நெய்யை ஊற்றி, சூடாக்கி, மாவு கலவையில் ஊற்றி நன்கு கலக்கவும். இதை அடி ஆழமான ஒரு தட்டில் கொட்டி, கரண்டியினால் நன்றாக அழுத்திவிடவும். ஃப்ரிட்ஜில் 2 (அ) 3 மணி நேரம் வைத்து எடுத்தால் நன்றாக செட் ஆகி இருக்கும். பிறகு, துண்டுகள் போடவும்.

Rates : 0

Loading…