மூச்சுத் திணறல் பிரச்சனைக்கு எளிய தீர்வு இதோ

மூச்சுத் திணறல் பிரச்சனைக்கு எளிய தீர்வு இதோ

Wheezing எனும் ஒரு வகை மூச்சுத் திணறலுக்கு, சில இயற்கை மருத்துவத்தை கையாள்வதன் மூலமாக சரி செய்யலாம்.

Wheezing பிரச்சனை உள்ளவர்கள் எந்நேரமும் Inhaler பயன்படுத்துவார்கள். ஆனால், சரியான நேரத்தில் அது இல்லையெனில் நிலைமை சிக்கலாகிவிடும்.

இதற்கு தீர்வு Wheezing-ஐ நமது கட்டுக்குள் வைத்திருப்பதே ஆகும். இயற்கையான முறையில் மூச்சுத் திணறல் பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.

மஞ்சள்
அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சினேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட மஞ்சள், Wheezing பிரச்சனைக்கு எளிய முறையில் தீர்வு தரும் ஒன்றாகும்.

ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரைத்த மஞ்சள் தூளை அரை தேக்கரண்டி சேர்த்து, தினமும் காலையில் குடித்து வர வேண்டும். இதன்மூலம் ஆஸ்துமா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும்.

கற்பூரம் மற்றும் கடுகு
கடுகு எண்ணெய் சளி சேர்வதை குறைக்க உதவும். இதன்மூலம் சுவாச மண்டலம் சீராக செயல்படும். எனவே, கடுகு எண்ணெயை சிறிதளவு சூடாக்கி எடுத்துக் கொண்டு, அதனுடன் கற்பூரத்தை சேர்த்து ஒரு ஜாடியில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனை நுகர்ந்தால் ஆஸ்துமா போன்று மூச்சுத் திணறல் பிரச்சனை படிபடியாக குறையும்.

எலுமிச்சை சாறு
தினமும் எலுமிச்சை சாற்றை குடிப்பதன் மூலம் சளி கட்டுக்குள் இருக்கும். இதன்மூலம் சுவாசம் தடைப்பட்டு ஏற்படும் Wheezing குறையும்.

எனவே, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை தினமும் காலையில் பருகலாம். அல்லது தினமும் சர்க்கரை சேர்க்காமல் ஒரு தம்ளர் எலுமிச்சை சாறு பருகலாம். இதன்மூலம் சுவாச பாதை சீராகும். அத்துடன் சளி மற்றும் இருமலும் குறையும்.

தேன்
தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண் கிருமிகள் எதிர்ப்பு தன்மை பண்புகள், இருமலை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். Wheezing-ஐ இது தடுக்க உதவும்.

மேலும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயக்கத்தை அதிகரித்து உடலை சீர்படுத்தும். தேனின் வாசனையை நுகர்வதன் மூலம் Wheezing-ஐ கட்டுப்படுத்தலாம்.

கிங்க்கோ பிலோபா மூலிகை நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்தும். எனவே இதனைக் கொண்டு Wheezing மற்றும் மூச்சுத் திணறல் போன்றவற்றை குணப்படுத்தலாம். இந்த மூலிகையை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராக பருகலாம்.

இந்த தேநீர் கொதிக்கும்போது வரும் ஆவியை சுவாசிக்க, சுவாசப் பிரச்சனை நீங்கும். இது மாத்திரை வடிவிலும் கிடைக்கும்.

பூண்டு
இருமல் போன்ற பாக்டீரியா தொற்றை தடுக்க பூண்டு பெருமளவு உதவுகிறது. பூண்டை பயன்படுத்துவதன் மூலம் மூச்சுக் குழாயில் படியும் சளி நீங்கும்.

ஒரு நாளைக்கு 3 அல்லது 4 பல் பூண்டுகள் சாப்பிடுவதன் மூலம் கடுமையான ஆஸ்துமாவைத் தடுக்கலாம்.

ஆளி விதைகள்
அழற்சி எதிர்ப்பு தன்மைகள் அதிகளவில் கொண்டுள்ள ஆளி விதைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் Wheezing பிரச்சனை சரியாகும்.

தினமும் ஒரு தேக்கரண்டி ஆளி விதை எண்ணெய்யை பருகுவதால், Wheezing ஏற்படுவது தடுக்கப்படும். அல்லது ஆளி விதைகளை அரைத்து அரை தேக்கரண்டி என்ற விகிதத்தில் தினமும் மென்று சாப்பிடலாம்.

Rates : 0

Loading…