வயிற்றுப் போக்கால் அவஸ்தையா வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்

வயிற்றுப் போக்கால் அவஸ்தையா வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்

தொற்று கிருமிகள், அஜீரணம் போன்றவற்றால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது, அத்துடன் முறையற்ற உணவு முறைகளாலும் வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

உடலிலிருந்து அதிகளவு நீர்ச்சத்து வெளியேறினால் மயக்கம், வாந்தி, காய்ச்சல் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படும்.

இதற்கான மருந்தை வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே தயாரிக்கலாம்.

கொய்யா இலை தண்ணீர்
ஒரு பாத்திரத்தில் நாவல் இலை, கொய்யா இலைகளின் கொழுந்துகளை எடுத்து துண்டுகளாக்கி போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி இருவேளை குடித்துவர எவ்வித வயிற்றுபோக்கும் கட்டுக்குள் வரும்.

வெண்டைக்காய் பிஞ்சு
ஒரு பாத்திரத்தில் வெண்டைக்காய் பிஞ்சுகளை சிறு துண்டுகளாக்கி போடவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தினமும் இருவேளை குடித்துவர வயிற்றுக் கடுப்பு, சீதபேதி, ரத்தம் கலந்துவரும் பேதி ஆகியவை குணமாகும்.

பாலுடன் சாதிக்காய்
50 மில்லி காய்ச்சிய பால் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சாதிக்காய் சேர்த்து கலந்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கு குணமாகும்.

Rates : 0

Loading…