வெல்ல அதிரசம் எப்படி செய்வது

வெல்ல அதிரசம் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பதப்படுத்திய பச்சரி மாவு (பச்சரிசியை தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தி அரைத்த மாவு) ஒரு கப், வெல்லம் முக்கால் கப்,
ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்,
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.


செய்முறை:

கடாயில் சிறிதளவு நீர் விட்டு, பொடித்த வெல்லத்தை சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டவும். இதை மீண்டும் அடுப்பிலேற்றி பாகு தயாரிக்கவும். (சிறிது பாகை எடுத்து நீரில் போட்டு, கையில் எடுத்தால் உருட்ட வர வேண்டும். அதுதான் பதம்). பிறகு, பாகை அடுப்பிலிருந்து இறக்கி, பச்சரிசி மாவின் மேல் சிறிதுசிறிதாக ஊற்றிக் கலக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, ஒரு சிறிய உருண்டை மாவை எடுத்து வைத்து வட்டமாக தட்டி, காயும் எண்ணெயில் போட்டு, இருபுறமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும் (இரண்டு கரண்டிகளுக்கு நடுவே வைத்து அழுத்தி எடுக்கவும்).

Rates : 0

Loading…