வெள்ளைப் பூசணி பச்சைப் பட்டாணிக் கூட்டு எப்படி செய்வது

வெள்ளைப் பூசணி பச்சைப் பட்டாணிக் கூட்டு எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

வெள்ளைப் பூசணி – ஒரு சிறு துண்டு,
பச்சைப் பட்டாணி – அரை கப்,
தேங்காய்த் துருவல், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
சிறிய பச்சைமிளகாய் – ஒன்று,
கறிவேப்பிலை – தேவையான அளவு,
உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:

பூசணியைத் தோல், விதை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீர்விட்டு ஒரு கொதிக்கு வேகவைக்கவும். பச்சைப் பட்டாணியையும் வேகவைத்துக்ªகாள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து வேகவைத்த காய்கறிகளுடன் கலந்து, உப்பு சேர்க்கவும். கடைசியாக ஒரு கடாயில் அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுத் தாளித்து, காய்கறிக் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.

Rates : 0

Loading…