வேகவைத்த முட்டை கோஸ் தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்

வேகவைத்த முட்டை கோஸ் தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்


தேவையான பொருட்கள்

நம் வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட ஓர் காய் என்றால் அது முட்டைகோசைச் சொல்லலாம்.

முட்டைகோஸ் வேக வைத்த நீர் அல்லது முட்டைகோஸ் சூப் ஆகியவற்றை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் அவற்றை ஏன் குடிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

உடல் எடை அதிகரித்தால் பிற பிரச்சனைகள் எல்லாம் தானாக தேடி வரும். அவர்களுக்கு இந்த முட்டை கோஸ் ஜூஸ் சிறந்த பலனை அளிக்ககூடியது. இதனை குடிப்பதால் உள்ளுருப்புகளில் படிந்திருக்கும் டாக்ஸின்களை அழிக்க வல்லது. இதில் குறைவான கலோரியே உள்ளதால் உங்களுக்கு கொழுப்பும் சேராது. இதனால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம்.

அதிக காரமுள்ள உணவுகளை சாப்பிடுவது, ஹோட்டல் சாப்பாடு போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படக்கூடும். அல்சர் கடுமையான வயிற்றுவலியை உண்டாக்கும். இதிலிருந்து மீளவும் உங்களுக்கு முட்டைகோஸ் தண்ணீர் உதவிடுகிறது. இதில் இருக்கும் விட்டமின் சி இதனை கேபேஜென் என்றும் சொல்வார்கள். இது வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக்கூடியது.

இதில் இருக்கக்கூடிய சல்ப்போரபேன் என்ற சத்து உடலில் கேன்சர் செல்கள் வளராமல் தடுத்திடும். அதோடு முட்டைகோஸ் ஜூஸில் அதிகப்படியான ஐசோசியனேட் இருக்கும் இவை உள்ளுருப்புகளில் குறிப்பாக நுரையிரல்,வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுத்திடும்.

ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் கொண்டாடும் போது, நமக்கு வயதாகிவிட்டதே என்ற ஒரு கவலை ஒரு கணம் வந்து போகாமல் இருக்காது. எல்லாருக்கும் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதே பலரது கனவாக இருக்கிறது. அவர்கள் எல்லாருக்கும் வரப்பிரசாதமாக இருப்பது இந்த முட்டைகோஸ் ஜூஸ் தான். இதில் விட்டமின் சி, பீட்டா கரோட்டீன் ஆகியவை நிறைந்திருக்கிறது. இவை குடிப்பதால் உங்களது விரைவில் வயதான தோற்றம் உண்டாவதை கட்டுப்படுத்தும்

Rates : 0

Loading…