ஸ்ட்ராபெர்ரி யோகர்ட் எப்படி செய்வது

ஸ்ட்ராபெர்ரி யோகர்ட் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

ஸ்ட்ராபெர்ரி – 10,
தயிர் – 3 கப்,
சர்க்கரை – முக்கால் கப்,
தண்ணீர் – முக்கால் கப்.


செய்முறை:

தயிரை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு மூடி, வடிகட்டியின் மேல் வைத்து, கீழே பாத்திரம் வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீர் வடிந்து தயிர் நன்கு கெட்டியாக இருக்கும். சர்க்கரையுடன் தண்ணீரைக் கலந்து காய்ச்சவும். சர்க்கரை கரைந்ததும் நறுக்கிய ஸ்ட்ரா பெரியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். ஆறிய பின் வடிகட்டி, தயிருடன் சேர்த்து, ஃப்ரிட்ஜில் குளிர்வித்து சாப்பிடவும்.

Rates : 0

Loading…