அங்காயப் பொடி எப்படி செய்வது

அங்காயப் பொடி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கடுகு 25 கிராம்,
வேப்பம்பூ ஒரு கைப்பிடி அளவு,
சுக்கு ஒரு சிறிய துண்டு,
சுண்டைக்காய் வற்றல் 15,
உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
சீரகம் ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி அளவு,
மிளகு ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் சிறிதளவு,
எண்ணெய், உப்பு தேவையான அளவு,


செய்முறை:

கடுகு, வேப்பம்பூ, சுண்டைக்காய் வற்றல், சுக்கு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். பெருங்காயத்தை எண்ணெ யில் பொரிக்கவும். ஆறிய உடன் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும்.

குறிப்பு: பிரசவித்த பெண்களுக்கு, இந்தப் பொடியை சூடான சாதத் தில் சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிடக் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் காக்கும்.

Rates : 0

Loading…