அடிக்கடி மலச்சிக்கல் உண்டாகுதா அதை எப்படி தவிர்க்கலாம்

அடிக்கடி மலச்சிக்கல் உண்டாகுதா அதை எப்படி தவிர்க்கலாம்

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குப் பொதுவாக உணவு ஜீரணித்தல் மிக மெதுவாக நடைபெறும். அதனால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் உண்டாவது இயற்கை தான். ஆனால் மற்றவர்களுக்கும் அடிக்கடி மலச்சிக்கல் உண்டாகிறது.

இந்த பிரச்னையை எப்படி சரிசெய்வது?… இதற்குக் காரணம் என்ன?

பொதுவாக மலச்சிக்கல் நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் மலச்சிக்கல் உண்டாகும்.

செரிமானம் ஆக தாமதமாகும் உணவுகளை சாப்பிட்டால், அதற்குத் தகுந்த உடலுழைப்பும் உடற்பயிற்சியும் நிச்சயம் தேவை.

அசைவ உணவுகள் சாப்பிட்ட பின் குளிர்ந்த நீர் பருகுவதைக் காட்டிலும் வெந்நீர் குடிப்பது சிறந்தது. அது உணவுச் செரித்தலை வேகப்படுத்தும்.

மலச்சிக்கலை சரிசெய்ய மிக எளிமையான தீர்வு ஒன்றும் உண்டு. அது என்ன தெரியுமா?… கொய்யாப்பழம் தான். ஆம். தீராத மலச்சிக்கலையும் கொய்யாவால் சரிசெய்ய முடியும்.

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.

கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.

சருமத்துக்கு மிகவும் நல்லது கொய்யா. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும். தோல் சுருக்கத்தைக் குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும்.

தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது

Rates : 0

Loading…