அடிக்கடி வயிற்றுப் பிரச்னைகள் வருதா இதுதான் தீர்வு

அடிக்கடி வயிற்றுப் பிரச்னைகள் வருதா இதுதான் தீர்வு

மாதுளை பழங்களின் அரசி என்று அழைக்கப்படுகிறது. ஜூஸ் அதிகமாகக் கிடைக்கும் இந்த மாதுளை அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களை உடையது. பல மருத்துவ குணங்களையும் கொண்டது. அதனாலேயே ஆயுர்வேத மருத்துவத்தில் மாதுளை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல நோய்களைக் கட்டுப்படுத்தும் வரப்பிரசாதமாக மாதுளை திகழ்கிறது.

மாதுளையில் பாலிபினைல்கள் நிறைந்து காணப்படுகின்றன. பாலிபினைல் சிறந்த ஆண்டி ஆக்சிடண்ட்டாகச் செயல்படுகிறது.

இதய அறையின் சுவர்களைச் சேதமடையாமல் ஆண்டி- ஆக்சிடண்ட்கள் காக்கின்றன. அதன்மூலம் இதய வால்வுகளில் கொலஸ்ட்ரால் தேங்குவது தடுக்கப்படுவதால், இதய நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மாதுளையில் உள்ள ஆஞ்சியோடென்சின் குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகிய பல்வேறு புற்றுநோய்களும் வராமல் மாதுளையில் உள்ள பாலிபினைல் தடுக்கிறது.

ஜீரண மண்டலத்தைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், நம்முடைய உணவில் அதிக அளவில் நார்ச்சத்துடைய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோயெதிர்ப்பு சக்தி குறைவது முதுலில் நம்முடைய ஜீரண மண்டலத்தையே பாதிக்கும். ஒரு மாதுளையில் நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்தில் 45 சதவீதம் கிடைக்கிறது.

தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டு வருவதால், நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.

மாதுளை ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். அதனால் சருமமும் இளமையாக, பொலிவுடன் காட்சியளிக்கும்.

மாதுளையில் சுண்ணாம்புச் சத்தும் பாஸ்பரசும் நிரம்பியிருக்கின்றன. அவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதோடு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களையும் தாக்கி அழிக்கிறது.

வயிற்றுப் பொருமல் மற்றும் மாதவிடாய் கால வயிற்று வலிக்கு மாதுளை சிறந்த தீர்வாக அமையும்

Rates : 0

Loading…