அவல் தேங்காய் கேசரி எப்படி செய்வது

அவல் தேங்காய் கேசரி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

அவல் ஒரு கப்,
தேங்காய்த் துருவல் அரை கப்,
பொடித்த வெல்லம் அரை கப்,
தண்ணீர் அரை கப்,
நெய் தேவையான அளவு,
ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன்,
நெய்யில் வறுத்து, பொடித்த முந்திரி சிறிதளவு.


செய்முறை:

பாத்திரத்தில் நீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு, கரைந்ததும் வடிகட்டவும். அதை மீண்டும் அடுப்பிலேற்றி, ஒரு கொதி வந்ததும் அவல் சேர்த்துக் கிளறவும். பிறகு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். அவ்வப்போது நெய் சிறிதளவு சேர்க்கவும். கலவை சற்று கெட்டியானதும் ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி தூவி சாப்பிடவும்.
பலன்: உடல் உறுதியாக இருக்க, சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.

Rates : 0

Loading…