ஆரஞ்சு கத்லி எப்படி செய்வது

ஆரஞ்சு கத்லி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

ஆரஞ்சு சுளைகள் – 2 கப்,
முந்திரி – 200 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

முந்திரியை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஆரஞ்சை ஜூஸாக்கி இதனுடன் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் ஏற்றி, சர்க்கரை, அரைத்த முந்திரி ஆரஞ்சு விழுது சேர்த்துக் கிளறி, தீயை மிதமாக வைத்து, நெய் விட்டு நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியானதும் தட்டில் போட்டு பரப்பி, ஆறவிட்டு துண்டுகள் போடவும்.
விருப்பப்பட்டால் ஆரஞ்சு ஃபுட் கலர் ஒரு சிட்டிகை சேர்த்துக்கொள்ளலாம்.

Rates : 0

Loading…