ஆரஞ்சு புலாவ் எப்படி செய்வது

ஆரஞ்சு புலாவ் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 2 கப்
ஆரஞ்சு சாறு – 2 கப்,
பட்டை, லவங்கம் தலா ஒன்று,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்,
வேகவைத்த பச்சைப் பட்டாணி கால் கப்,
பச்சை மிளகாய் – 2,
முந்திரி – 6, நெய்,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

பாசுமதி அரிசியை நன்கு கழுவி ஆரஞ்சு சாறு, ஒன்றரை கப் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் பட்டை, லவங்கம், தேவையான உப்பு சேர்த்து, ஊறவைத்த அரிசியை நீருடன் சேர்த்துக் கலந்து மூடி, ஒரு விசில் வந்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் முந்திரி சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், வேகவைத்த பச்சைப் பட்டாணி, சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி, வெந்த சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்: உடல் சூட்டைத் தணிக்கும்.

Rates : 0

Loading…