ஆரஞ்சு ரைஸ் எப்படி செய்வது

ஆரஞ்சு ரைஸ் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 2 கப்,
ஆரஞ்சுப் பழச்சாறு – 2 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்,
இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
சர்க்கரை கால் கப்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு,
நெய் சிறிதளவு,
உப்பு தேவைக்கேற்ப.


செய்முறை:

ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளவும். குக்கரில் சிறிதளவு நெய் விட்டு… நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் ஆரஞ்சுப் பழச்சாறு, களைந்த அரிசி, உப்பு, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

Rates : 0

Loading…