இஞ்சி மெதுபக்கோடா எப்படி செய்வது

இஞ்சி மெதுபக்கோடா எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

இஞ்சி ஒரு துண்டு,
பச்சை மிளகாய் – 2,
கடலை மாவு ஒரு கப்,
அரிசி மாவு அரை கப்,
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
ஆப்பசோடா ஒரு சிட்டிகை,
வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்),
கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு,
எண்ணெய், உப்பு தேவையான அளவு.


செய்முறை:

தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த கலவையுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், ஆப்பசோடா, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பலன்: ஜீரண சக்தியை அதிகரிக்கும். ரத்த சோகையை கட்டுப்படுத்தும்.

Rates : 0

Loading…