இந்த தண்ணிய தினமும் ஒரு கிளாஸ் குடிங்க இதெல்லாம் கிடைக்கும்

இந்த தண்ணிய தினமும் ஒரு கிளாஸ் குடிங்க இதெல்லாம் கிடைக்கும்

பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டு வர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதேசமயம் அந்த வெங்காயத்தை சூடுதண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும்னு தெரியுமா?

வெங்காயத்துக்குள் என்னென்ன சத்துக்கள் அடங்கியிருக்குன்னு தெரியுமா?

நீர்ச்சத்து – 86.6 சதவீதம்

புரதம் – 1.2 சதவீதம்

கொழுப்புச்சத்து – 0.1 சதவீதம்

நார்ச்சத்து – 0.6 சதவீதம்

தாதுச்சத்து – 0.4 சதவீதம்

கார்போஹைட்ரேட் – 11.7 சதவீதம்

வெங்காயத்தின் மருத்துவப் பயன்கள்

வெங்காயத்தை அப்படியே பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால், சிறுநீர் கடுப்பு குறைந்து, நன்கு சிறுநீர் வெளியாகும்.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி, சாப்பிட உஷ்ணம் குறையும்.

ரத்தசோகையால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் தங்கள் உணவில் வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயத் தண்ணீர் குடிக்கும் முறை

பொதுவாக, தண்ணீர் அதிகமாகக் குடிக்காமல் வெயிலில் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படும். அதுபோன்று அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுபவர்கள் வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இந்த தண்ணீரைக் குடித்துவர வேண்டும்.

வெங்காயத்தைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் பொறுமை இல்லாதவர்கள் அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம்.

வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். அவர்கள் இதுபோல் வெங்காயத்தை தண்ணீரில் போட்டு காய்ச்சிக் குடித்தாலும், வெங்காயத்தை சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவி வந்தாலும் விரைவில் சரியாகிவிடும்.

Rates : 0

Loading…