இளநீர் மருத்துவம் இது ஆண்களுக்கு மட்டும்

இளநீர் மருத்துவம் இது ஆண்களுக்கு மட்டும்

இளநீர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஓர் அற்புத பானம் என்பது நமக்குத் தெரியும். இந்த இளநீர் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமே நன்மைகளை வாரி வழங்கும். குறிப்பாக ஆண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல முடியாத பல பிரச்சனைக்கு இளநீர் நல்ல தீர்வை வழங்குகிறது.

பொதுவாக ஆண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இரத்த ஓட்டம் குறைவாக இருப்பது, நரம்பு பாதிப்பு, மன அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான ஆண்களுக்கு பாலியல் பிரச்சனையே மன இறுக்கத்தை உண்டாக்கும்.

ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு ஏராளமாக உள்ள இயற்கை நிவாரணிகளில் இளநீரும் ஒன்று.

இளநீரில் சோடியம் அதிகம் உள்ளது. இது தசைகளின் ஆரோக்கியமான சுருக்கத்திற்கு இன்றியமையாதது. மேலும் சோடியம் உடலில் தண்ணீர் மற்றும் நீர்மங்களின் ஓட்டத்திற்கும் முக்கியம்.

எனவே ஆண்கள் இளநீரை தொடர்ந்து குடித்து வந்தால், உடலுக்கு போதுமான சோடியம் கிடைத்து, பாலியல் பிரச்சனைகள் நீங்கும்.

விறைப்புத்தன்மை செயல்பாட்டிற்கு பொட்டாசியம் என்னும் அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் அவசியமாகும்.

இந்த குறைபாடு ஏற்படும் போது தான், பாலியல் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே பாலியல் பிரச்சனையை சந்தித்தால், இளநீரை தினமும் ஒன்று குடித்து வாருங்கள்.

உடலில் மக்னீசியம் ஏற்றத்தாழ்வுடன் இருந்தால், அது இரத்த ஓட்டத்தை பாதித்து, அந்தரங்க பிரச்சனைக்கு வழிவகுக்கும். ஆகவே ஆண்கள், மக்னீசியம் நிறைந்த இளநீரை தினமும் பருகுவது உகந்த பலனை அளிக்கும்.

Rates : 0

Loading…