உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

உலர் திராட்சையில் விட்டமின் B, C போலிக் ஆசிட், இரும்புச் சத்து, பொட்டாசியம், கல்சியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒரு டம்ளர் நீரில் பத்து உலர் திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உண்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமடையும். அதே உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து,
அருந்தினால் குடற் புண்கள் குணமாகும். மற்றும் உடல் வெப்பம் தணிவதற்கு உலர் திராட்சை பெரிதும் பயன்படுகின்றது.

பாலில் உலர் திராட்சைகளைப் போட்டு காய்ச்சி குடித்தால் இதயத் துடிப்பு சீராகும். உலர் திராட்சையை கொதிக்க வைத்து, மசித்து தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். சுகமான தூக்கத்திற்கு பாலில் உலர் திராட்சைகளை இட்டு, காய்ச்சி வடிகட்டிய பாலை அருந்த வேண்டும்.

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

உலர் திராட்சைகள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகை நோய் குணமாக உதவுகின்றன. உலர் திராட்சையில் எலும்புகளின் வலிமைக்கு தேவையான கல்சியம் அதிகளவில் உள்ளது. ஆகவே உலர் திராட்சைகள் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வாகவும் காணப்படுகின்றன.

Rates : 0

Loading…