காய்கறி சப்பாத்தி எப்படி செய்வது

காய்கறி சப்பாத்தி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

முட்டை – 4,
காய்கறி (பொடியாக நறுக்கிய கோஸ், கேரட், குடமிளகாய் போன்றவை) – ஒரு கப்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – அரை கப்,
பச்சை மிளகாய் – 1,
மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு, மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

கடாயை அடுப்பில்வைத்து, எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயம் மற்றும் துருவிய காய்கறிகளைக் கொட்டி, நன்கு வதக்கவும். கால் டீஸ்பூன் உப்பில், பாதி அளவு போட்டு வதக்கவும். மீதி இருக்கும் உப்பு, மஞ்சள்தூளை ஒரு கிண்ணத்தில் போட்டு, முட்டையை உடைத்து ஊற்றி, கரண்டி அல்லது பீட்டரால் (Beater) நன்கு அடித்துக்கொள்ளவும். வதக்கிய காய்கறியை முட்டையோடு சேர்த்துக் கலந்து, தோசைக்கல்லில் கனமான ஆம்லெட்களாக ஊற்றி, எண்ணெய் விட்டு, திருப்பி வேகவிடவும். சூடாக அப்படியே அல்லது பிரெட்டுடன் சாப்பிடலாம். சத்து மிகுந்த காலை உணவு.

குறிப்பு:

காய்கறிகளைத் துருவும் உபகரணம் இருந்தால், காய்கறிகளைக் கழுவிவிட்டு, அப்படியே துருவிச் சேர்ப்பது எளிது. காய்கறிகள் இல்லை என்றால் வெங்காயம், குடமிளகாய் மட்டும் சேர்த்துச் செய்யலாம். ருசியாக இருக்கும்.

மஞ்சள் கரு இல்லாமல் வெள்ளைப் பகுதியை மட்டும் ஆம்லெட் போட நினைப்பவர்கள், ஒரு முட்டை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பலன்கள்:

புரதம், இரும்பு, வைட்டமின் பி12, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற அனைத்து சத்துக்களும் உள்ளன. சமச்சீரான உணவு இது. உடலுக்கு உறுதியும், பலமும் கிடைக்கும்.

Rates : 0

Loading…