கீரை சாதம் எப்படி செய்வது

கீரை சாதம் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

அரிசி (பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி) ஒரு கப்,
துவரம்பருப்பு – அரை கப்,
முருங்கைக் கீரை அல்லது பொடியாக நறுக்கிய அரைக் கீரை – அரை கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,
புளி – சிறு கோலிக்குண்டு அளவு.

அரைக்க:
தேங்காய்த் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 6, சீரகம் – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 5.


செய்முறை:

அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். அரிசி, பருப்பு, கீரை, மஞ்சள் தூள், புளி கரைத்த விழுது, அரைத்த தேங்காய் விழுது எல்லாவற்றையும் குக்கரில் சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி, அடுப்பில் வைக்கவும். 3 விசில் வந்தபிறகு இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும். அப்பளம் தொட்டுச் சாப்பிடலாம்.

பலன்கள்:

கார்போஹைட்ரேட்டும் புரதமும் இரும்புச்சத்தும் சமச்சீரான அளவில் கிடைக்கும் உணவு இது.

Rates : 0

Loading…