குதிரைவாலி பொங்கல் எப்படி செய்வது

குதிரைவாலி பொங்கல் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

குதிரைவாலி அரிசி – அரை கப்,
பாசிப் பருப்பு – கால் கப்,
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
பெருங்காயம் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன்.


செய்முறை:

பருப்பு, குதிரைவாலி அரிசி இரண்டையும் கழுவி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் வேகவைக்கவும். பிறகு, கடாயில் எண்ணெய், நெய்யைக் காயவிட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து (அடுப்பை `சிம்’மில்வைத்துத் தாளிக்கவும்) அரிசி, பருப்பில் கொட்டி, உப்பு போட்டுக் கிளறிவிட்டு, குக்கரை மூடி வைத்து வெயிட் போட்டு, இரண்டு விசில் வந்தபிறகு, `சிம்’மில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கவேண்டும்.

பலன்கள்:

நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தாது உப்புகள், வைட்டமின் பி, புரதம் போன்றவை உள்ளன. வயிறு நிறையும் உணவாக இது இருக்கும். மேலும், இது உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். செரிமானமாவதும் எளிது.

Rates : 0

Loading…