கொத்தமல்லி சட்னி எப்படி செய்வது

கொத்தமல்லி சட்னி எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கொத்தமல்லித்தழை (மீடியம் சைஸ் கட்டு) ஒன்று,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி ஒரு சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் – 2,
புளி சிறு நெல்லிக்காய் அளவு,
வெல்லம் அரை டீஸ்பூன்,
கடுகு, உளுந்து தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய் சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

கொத்தமல்லித்தழையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளித்து… தோல் சீவிய இஞ்சி, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி ஆறவிடவும். இதனுடன் கொத்தமல்லித் தழை, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் (சிறிதளவு தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்).

பலன்: உடல் குளிர்ச்சி பெறும். கண் பார்வை பலப்படும்.

Rates : 0

Loading…