கொய்யா மல்டி ஃப்ரூட் சாலட் எப்படி செய்வது

கொய்யா மல்டி ஃப்ரூட் சாலட் எப்படி செய்வது


தேவையான பொருட்கள்

கொய்யாப்பழத் துண்டுகள், மாதுளம்பழ முத்துக்கள், அன்னாசித் துண்டுகள், பப்பாளித் துண்டுகள் – தலா ஒரு கப்,
சாட் மசாலா தூள் – கால் டீஸ்பூன்,
ஆரஞ்சுச் சுளை, வாழைப்பழத் துண்டுகள் – 2,
தேன் – 2 டீஸ்பூன்.


செய்முறை:

கொய்யா, மாதுளை, அன்னாசி, பப்பாளி, வாழைப்பழத் துண்டுகள், விதை நீக்கிய ஆரஞ்சுச் சுளையைச் சேர்த்து, தேன் கலந்து ஒரு அகலமான பவுலில் போட்டுக் கலக்கவும்.
குறிப்பு: சாப்பாட்டுக்கு இடைப்பட்ட நேரத்தில் அதாவது, காலை 11 மணி, மாலை நான்கு மணிக்குச் சாப்பிடுவது நல்லது.


பலன்கள்:

பப்பாளியில், பீட்டா கரோட்டின், இரும்பு, வைட்டமின் சி, தாது உப்புக்கள்; மாதுளையில், இரும்புச் சத்து; வாழையில், கார்போஹைட்ரேட்; கொய்யாவில், நார்ச்சத்து, வைட்டமின் சி என, எல்லா சத்துக்களும் இந்தப் பழக்கலவையில் அடங்கியிருக்கின்றன. உடலுக்கான அத்தனை சத்துக்களையும் அள்ளித்தரும். அனைவருக்கும் உகந்தது.

Rates : 0

Loading…